Monday 23 May 2011

சமச்சீர் கல்வி - அம்மா அரசின் அதிரடி..

சமச்சீர் கல்வி - அம்மா அரசின் அதிரடி..

தி மு க ஆட்சியில் மக்கள், கல்வித்துறை அதிகாரிகள், சிறுபான்மை இனத்தவர், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வேண்டாம் என்று சொன்ன போதிலும் , தன் சுய தம்பட்டதுக்கு அள்ளி தெளித்த கோலமாக கருணாநிதி சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்தார்.. ! 

முதல்வர் அம்மா அவர்கள், களை எடுக்கும் வேலையாக  இந்த சமச்சீர் கல்வி திட்டத்துக்கு தடைவிதித்துள்ளார். பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் , அவசர கோலத்தில் தி மு க கொண்டவந்த சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்தி மாணவர்கள் படிப்பை சீரழிக்க மனமில்லாது , அதே நேரம் அதை நெறி படுத்த போதிய  அவகாசம் இல்லாத காரணத்தால் இந்த தடையை அம்மா பிறப்பித்துள்ளார்.  

மீண்டும் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து,  சீரிய முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்..

அம்மாவின் இந்த முடிவு  அனைத்து தரப்பு மக்களையும் , பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தியுள்ளது.

திமுக மற்றும் சிலர் மட்டுமே அம்மாவின் முடிவு தவறு என்று விதண்டா வாதாதில் இறங்கி உள்ளனர்

கழக அமைச்சர் மாண்புமிகு மரியம் பிச்சை சாலை விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார் .

கழக அமைச்சர் மாண்புமிகு மரியம் பிச்சை சாலை விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார் .
 
பத்தி ஏற்பு  நிகழ்ச்சிக்காக , மிகுந்த சந்தோஷத்தோடு   திருச்சியிலிருந்து சென்னைக்கு தனது இன்னோவா காரில் வந்துக்கொண்டிருந்த  மாண்புமிகு மரியம் பிச்சை எதிர்பாராத விதமாக முன்னே சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டார். 
 
இந்த செய்தி கேட்டு முதல்வர் அம்மா அவர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியும் மீளா துயரமும் அடைந்துள்ளார். வேதனையோடே அவர் திருச்சிக்கு விரைந்துள்ளார்.. 
 
அம்மாவின் ஆணைக்கிங்க தனது வார்டு கவுன்சிலர் பதவியை துறந்துவிட்டு கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கில் தி மு க அமைச்சர் கே என் நேருவை எதிர்த்து கழக வேட்பாளராக போட்டியிட்டார் மரியம் பிச்சை.  சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் நேருவை குப்புற தள்ளி அமோக வெற்றி பெற்று , வெற்றியை அம்மாவின் காலடியில் சமர்ப்பணம் செய்தார்..
 
இந்த தொண்டனுக்கு அழகு செய்யும் விதத்தில் அம்மா அவர்கள் மரியம் பிச்சைக்கு சுற்றுசூழல் அமைச்சர் பொறுப்பை கொடுத்து வாழ்த்தினார்..   தனக்கு  கிடைத்த பரிசை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே மாண்புமிகு மரியம் பிச்சை அவர்கள் இந்த உலகை விட்டு சென்றது கழக தோழர்கள், முன்னணி தலைவர்கள் , மற்றும் திருச்சி மக்களை சோகத்தில் உறைய வைத்துவிட்டது..
 
அவரின் குடும்பாதுருக்கும் , கழக தொண்டர்களுக்கும், திருச்சி மக்களுக்கும் இது பேரிழப்பு..  அவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்

Saturday 21 May 2011

டாக்டர் புரட்சி தலைவி அம்மா

டாக்டர்  புரட்சி தலைவி அம்மா
 
மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழகத்தை காக்க வந்த அம்மாவிற்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.. !
அடுத்த ஐந்து ஆண்டுகள் நடக்க இருக்கும்  அம்மா ஆட்சியின் சாதனைகளை பட்டியலிடவே இந்த தளம். 
 
அம்மா பாபு