Friday, 3 June 2011

அம்மா ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம்

 
அம்மா அவர்கள் தலைமையில் கழகம் ஆட்சி பொறுப்பில் வந்து முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. இன்று நடைப்பெற்ற கவர்னர் உரையில் ஏழை மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மிக அருமையான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சீரிய உரையை கவர்னர் அவர்கள் வாசித்தபோது கைத்தட்டல் ஓயாமல் கேட்க்கொன்டே இருந்தது.. அந்தளவுக்கு மக்கள் வாழ்வாதார திட்டங்கள் , மாநில நலன் சார்ந்த திட்டங்கள் ஏராளம் ஏராளம். தி மு க மட்டுமே நிர்பந்தம் காரணமாக  இந்த உரையில் குறை கண்டுபிடித்துள்ளது  மற்ற அனைத்து கட்சிகளும் இந்த உரையை புகழ்ந்து தள்ளியுள்ளது .  
கவர்னர் உரை படிக்கையில் , கம்பீரமாக அம்மா அவையில் அமர்ந்திருந்தே ஒரு அழகு எனலாம்.
 
கருணாநிதி குடும்பம் கொள்ளை அடிக்க கொண்டுவரப்பட்ட காப்பீடு திட்டம்,  கான்க்ரீட் வீடு திட்டங்கள் ரத்து .
இலவச லேப்டாப் , மின்விசிறி, கிரைண்டர், மிக்சி அண்ணா பிறந்தநாள் அன்று முதல் தரப்படும்..
 
புரட்சி தலைவர் ரத்து செய்த மேலவையை கொண்டுவர துடித்த திமுக கருணாநிதிக்கு கரி பூச்சு..  புரட்சி தலைவர்  வேண்டாம் என்று சொன்னது வேண்டவே வேண்டாம்
 
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மோனா ரயில் திட்டமாக மாற்றப்படும். * ஏனைய பகுதிகளில் உள்ள சென்னை அண்ணா பல்கலை., கலைக்கப்பட்டு, சென்னையில் மட்டும், அண்ணா பல்கலை., இணைந்து ஒரே மையமாக செயல்பபடும்.* மக்கள் நலத்திட்டம் அங்க அடையாளத்துடன் கூடிய புதிய திட்டம்* முதியோர் உதவித்தொகை வங்கி மூலம் வழங்க ஏற்பாடு.பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை *ரூ.50 கோடி செலவில் விலைக்கட்டுப்பாடு நிதியம்*உற்பத்தி குறைவாக உள்ள அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்க திட்டம்* மீனவர்கள் நலன் பேணிக்காக்கப்படும், மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் ரூ. ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.* வேலைவாய்ப்பை பெருக்கிட ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டம்*வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல திட்டம்*முதன்மை துறையான வேளாண்மை ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்துள்ளது. இதனை சீர்செய்ய சிறப்பு கவனம்*கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படும்.இது மக்களின் தேவையை நிறைவேற்றும்படியாக முழுமையாக இல்லை எனவே அனைவருக்கும் தரமான மருத்துவம் பெற புதிய மருத்துவ திட்டம் கொண்டுவரப்படும். *சமச்சீர் கல்வி தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்குழு.சமச்சீர் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் எதிர்காலம் பாழாவதை இந்த அரசு விரும்பவில்லை. தற்போதுள்ள புது பாடத்திட்டத்தில் தரமானதாக இல்லை. ஆய்வு நடத்திட நிபுணர்குழு அமைக்கப்படும். *விவசாயிகள் நலன் கருத்தில் கொண்டு பண்ணைசார் சிறப்பு திட்டம்*துல்லிய பண்ணை முறை பெரிய அளவில் கொண்டு வரப்படும் அதிகவருவாய் தரும் பயிர்கள் பயிரிட தேவையான உதவிகள் செய்யப்படும்வேளாண்மையில் நீடித்த வளர்ச்சிக்கு பாசன நதி முக்கியம், நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். * மேட்டூரில் முன்கூட்டியே (ஜூன் 6ம் தேதி ) தண்ணீர் திறக்க உத்தரவு* வறுமையை ஒழிக்க பல்வேறு திட்டம் ஒருங்கிணைத்து ஏழை குடும்ப நல திட்டம் கண்காணிக்கப்படும்*வரீ சீர்திருத்தம், விற்பனை வரி, சரக்கு, சேவைவரியை பின்பற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.*முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னையில் சட்டப்படியான நடவடிக்கை எதிர்கொள்வது*தொழில் துறையில் மோட்டார்வாகனதுறை தகவல் தொழில் நுட்பம், கணனி துறையில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். * நானோ தொழில் நுட்பம் ஊக்குவிக்கப்படும்*தகவல் தொழில்நுட்பம் தொழில்பூங்கா மூலம் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்
மின்சாரம், சாலை வசதி குறைவு போக்கிட திட்டம் , மாநில அரசின் நிதியுடன் தனியார் தொழில் நிறுவனங்களுடன்
* மின் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆட்சியில் தொழில் துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு இல்லாத உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக உருவாக்கப்படும், தொழில்துறைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். மின் வழங்கிகள் மூலம் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக செயல்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்திக்கு முழுக்கவனம்.
* தொடர்பு துறைகள் பழைய செயல்பட்டு வருகிறது. அமைச்சர் ஒருபுறமும், செயலகம் ஒரு புறமும் இருப்பது நல்லதல்ல, கூடுதலான செலவு, தரமற்ற கட்டுமானம் இவைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிட்டி. *சட்ட ஒழுங்கு பேணிகாத்திட முழு நடவடிக்கை எடுக்கப்படும், ஜெ., ஆட்சி பொறுப்பேற்ற கடந்த காலத்தில் அமைதிப்பூங்காவாக நடத்தியுள்ளார். போலீஸ் துறை நவீனப்படுத்தப்படும், குற்றவாளிகள், கண்காணிக்கும் மின் திட்டம் விரைவில் செயலாற்றப்படும். *சென்னை நகரில் ஆற்றோரம் வாழும் நபர்களுக்கு பாதுகாப்பான வீடு வழங்கப்படும்.கடற்கரையோரங்களில் சிறு துறைமுகங்கள் தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்
*பெண்கள் நலன் நிறைவேற்றுவது இந்த அரசின் முக்கிய தலையாய பணி ஆகும். சுய உதவிக்குழு மூலம் தொடர்ந்து வங்கிகக்கடன் வழங்கப்படும்* மகளிருக்கு மின்விசிறி, கிரைண்டர் ,மிக்ஸி, செப் 15 ம் தேதி முதல் வழங்கப்படும் * சூரிய எரிசக்தி ஆரம்பகட்ட செலவு அதிகமாக இருந்தாலும் , தெருவிளக்கு, மற்றும் சமுதாய மாற்றங்களுக்கு தேவையான ஒன்றாக இந்த அரசு கருதுகிறது. எனவே இது ஊக்குவிக்கப்படும்.*சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
*சுற்றுச்சூழல் பாதுகாத்திட சிறப்பு முயற்சிகள் , மக்கிப்போகாத பிளாஸ்டிக் தொடர்பான சிறப்பு கவனம் எழுப்பிட புதிய திட்டம், பாலித்தின் பைகளுக்கு தடை
தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும், பள்ளிச்சேர்ப்பு அதிகரிக்க நடவடிக்கை.
*மேலவை தேவையில்லை என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முடிவு எடுத்திருந்ததால் அதன் அடிப்படையில் மீண்டும் மேலவை ஏற்படுத்த மாட்டாது.

* வீட்டு வசதி திட்டத்தினால் பயனாளிகளுக்கு உரிய பயன் கிடைக்காததாலும், அரசு வழங்கிய நிதிஉதவி மிக குறைவு என்பதாலும், அந்த திட்டம் கைவிடப்ட்டு, அரசே வீடுகள் கட்டத்திர ஏற்பாடுகள் செய்யப்படும்.
மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி இணைக்கும் தனி இயக்குனரகம் உருவாக்கப்படும்.
*அரசு ஊழியர் பெண்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்படும்.
*சிறிய கிரமாங்களுக்கும் தார்ச்சாலைகள் அமைத்தல்.
*பொதுமக்களி்ன் நலனை கருத்தில் கொண்டு கேபிள் டி.வி., அரசுடைமையாக்கப்படும்.
இலங்கை அகதிகள் முகாம் மேம்படுத்துதல், அவர்களது குழந்தைகள் கல்வியில் அக்கறை செலுத்துதல், இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் மறுவாழ்வு பணிகள் நடப்பது தொடர்பான விஷயத்தை இந்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
*கலைஞர் வீட்டு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
சிறுதுறைமுகங்கள் மேம்படுத்தப்படும் .
* முறைகேடாக சேர்‌த்த சொத்துக்கள் பறிக்க புதிய சட்டம்

2 comments:

 1. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete
 2. Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

  ReplyDelete